ஒரு சோக காதல் கதை:

(மெயிலில் வந்தது...)

ஒரு பையனுக்கு கேன்சர் இருந்தது. எல்லோருக்கும் தெரிந்ததுதானே கேன்சரை குணப்படுத்த முடியாது என்று. அவனுக்கு 18 வயது , எந்த நேரத்திலும் சாகலாம். அவன் வாழ்க்கை முழுதும் அவன் வீட்டிலேயே முடங்கி கிடந்து அம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டை விட்டு எங்கேயும் வெளியில் சென்றதில்லை.

ஒரு நாள் அவன் வெளியில் சென்று சுத்திபார்க்க அவன் அம்மாவிடம் அனுமதி வாங்கினான். அவன் வீட்டை விட்டு வெளியில் இறங்கி நடக்கையில் பல கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான். அப்படி ஒரு கடையை கடந்து விட்டு பின் திரும்பி இன்னொரு முறை அந்த கடையை பார்த்தான். அது ஒரு கேசட் கடை. அதைவிட முக்கியமாக அந்த கடையில் அவன் வயதை ஒட்டிய ஒரு தேவதை மாதிரி ஒரு பெண் இருந்தாள்.

அவன் மெதுவாக அந்த கடை உள்ளே சென்றான். அவன் 'என்ன வேண்டும்' என்று கேட்டுவிட்டு ஒரு புன்னகையை உதிர்த்தாள்.. அவன் வாழ்நாளில் இப்படியொரு அனுபவம் கிடைத்தில்லை. முதல் பார்வையிலே காதல் என்பதை உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு ஒருவித பயம்.. ஏதோ ஒரு கேசட்டை காட்டி இது வேண்டும் என்றான். அவளும் அதை எடுத்து இதை பார்சல் கட்டவா என்றாள். அவன் ஆமாம் என்பதாக தலையை ஆட்டினான். அவள் உள்ளே சென்று கேசட்டை அழகாக பார்சல் கட்டி வந்தாள்.

நேராக அதை கொண்டு போய் அவன் அலமாரியில் வைத்து விடுகிறான். இது தினமும் நடக்கிறது. ஒருநாள் கூட அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு பயம். கேசட்டை பிரித்து பார்த்ததும் கிடையாது. இது அவன் அம்மாவுக்கு தெரிய வருகிறது. அவள் அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறாள்.

அவன் அந்த கடைக்கு போய் ஒரு கேசட்டை வாங்கி அவள் பார்சல் கட்டும் சமயத்தில் ஒர் பேப்பரில் அவனது தொலைபேசி எண்ணை எழுதி வைத்துவிட்டு கேசட்டை வாங்கியவுடன் வீட்டிற்கு ஓடி வந்துவிடுகிறான்.
அடுத்த நாள் அந்த வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அவன் அம்மா எடுக்கிறார்கள்.. அவன் பெயரை சொல்லி 'இருக்கிறானா' என்று கேட்கிறாள்.. அம்மாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. அவன் நேற்றே இறந்து
விட்டான் என்று கூறுகிறாள். ஒரு பெரிய நிசப்தம். அவள் அம்மாவின் அழுகை தவிர எதுவும் கேட்கவில்லை.

அடுத்த நாள் அம்மா அவன் நியாபமாக அவன் அறைக்கு செல்கிறாள்.. அங்கே அவன் அலமாரியில் நிறைய பிரிக்கப்படாத பார்சல்கள் இருந்தன.. அதை பிரித்து பார்க்கிறாள். அதன் உள்ளே ஒரு கேசட்டும் ஒரு துண்டு
பேப்பரும் இருந்தது. அதில் 'நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். ஏன் என்னிடம் பேசவே மாட்டேங்குறே ' என்று எழுதியுருந்தது.. மற்ற பார்சல்களிலும் ஒரு கேசட்டும் அதே துண்டு பேப்பரும் இருந்தது.

நெஞ்சை தொடும் இந்த குட்டிகதையில் ஒரு பெரிய நீதியே இருக்கிறது.
உங்கள் துணையிடன் எப்பாவாவது சண்டை போட்டால், சிறிது நேரம் உங்கள் ஈகோவை கழட்டி வைத்துவிட்டு சில சமாதான வார்த்தை கூறுங்கள்.. இல்லாவிடில் அந்த பிரிக்கப்படாத பார்சல் போல பல வாய்ப்புகள் பறிபோகும்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
காதல் டைரி - 2

குற்றம்
புரிந்தவர்
வாழ்க்கையில்
நிம்மதி...

காதல்
புரிந்தவர் ???

-

மொழி
முக்கியமா.
காதல்
முக்கியமா..

என் வீட்டில்
நீ பேசப்போவது
எம் மொழி
என்றாய்...

நான்
நம்
காதல் மொழி
என்றேன்..

கடைசியில்
என் மொழியை
நீ
ஏற்றுக்கொண்டது

என்
காதலை
ஏற்றுக்கொண்டதை
விட மேல்

-

நிம்மதிக்காக
கடவுளை
தேடி

காடு
மேடெல்லாம்
சுற்றி..

கடினமான
பயண
களைப்பு...

வீடு
திரும்பியதும்
தருவாயே

ஒரு
ஃபில்டர் காபி..
காதல் நுரை
பொங்கி
வழிய..

-

வெறும்
சௌக்கியமாவில்
ஆரம்பித்த
நம் நட்பு..

இன்று
ஒருவருக்குள்
மற்றவர்
ஐக்கியமாகி

-
தட்டுச்சு
செய்யும்போது
உன்

பெயரில் உள்ள
எழுத்துக்களை
மட்டும்
என் விரல்கள்
தட்டுகின்றன...

படிக்கும்போது
என்
விரல்கள்
உன் பெயரில்
உள்ள
எழுத்துக்களை
சுற்றி வட்டமிடுகின்றன

ஆனாலும்
உன்
முகம் நோக்கி
பேசுகையில்
வார்த்தைகளை
தேடிப்பிடிக்க
கஷ்டப்படுவது
ஏன் பெண்ணே...

-

எனக்கு
பிடித்த
கவிதை
நீ

உனக்கு
பிடித்த
கவிதை
நான்.......

நமக்கு
பிடித்த
ஹைக்கூ
காதல்......



--

சொட்ட
சொட்ட
நனைந்த
ஒரு
மழைநாளில்..

திட்டு
திட்டாய்..
மனதில்
ஆசைகள்
எழும்பும்..

இன்று
நினைத்து
பார்க்கையில்
இனிமையாய்..

நல்லவேளை
பொழுதை
கெடுத்து
விடவில்லை....

-

எனக்கு
அன்று தெரிந்திருக்க
வாய்ப்பில்லை

இன்று
உன்னை பற்றி
கவிதையாய்

தீட்டும்
போதுதான்
தெரிகிறது.

உன்னை
பற்றி
எழுதி எழுதியே

என்
காலமெல்லாம்
கழிந்துவிடும் என்பது...


-

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

காதல் டைரி

-------------

காதலின்
ஆழத்தை அளவிட
முடியாது என்றாய்..

அன்று விழுந்தவன்..
இன்னும் எழவில்லை..

அளந்து
கொண்டேயிருக்கிறேன்..

-

முன்னுக்கு
வர கடின உழைப்பு
தேவை என்று
யார் சொன்னது..

நீ
உழைக்காமலே
என் கண் முன்
எப்பொழுதுமாய்..

-

காதலின்
நீளம், அகலம்
தெரியுமா ??

அன்று
விளையாட்டை
நீ
கேட்ட
கேள்விக்குபதில்..

இன்று
வினையாய்..

நீளம்...
நம் இருவருக்கும்
இடையில்
இருக்கும்
மௌனம்..

அகலம்..
நம்
இருவருக்கும்
இடையில்
இருக்கும்
தூரம்..


-

என்
கனவை
கலைத்தது
யார்...??

நீயே
என்றாலும்
கோபப்படாமல்
இருக்க
முடியாது..

கனவில்தான்
கவிதை
சரளமாக வருகிறது...

-

என்
முன்னோர்கள்
பெரும் தவம்
செய்திருக்க வேண்டும்..

உன்னை
என் வம்சா வழியில்
இணைத்துக்கொண்டதற்கு....

-

நிலவிலிருந்து
பார்த்தால்
சீனப்பெருஞ்சுவர்
தெரிகிறதாமே

நான்
பார்த்தால்..

இன்னொரு
நிலவு
தெரிகிறது
என்பேன்..

-

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
தூரத்து
காக்கை கூட்டம்..
நண்பர்கள்
உல்லாசம்..

சுண்டல் பையன்
சென்னை தமிழ்..
பூக்காரியின்
அணுகுமுறை..

தேவையில்லாத
காட்சிகளை ஒதுக்கி..
வெகு தொலைவில்
தெரிந்தாள் சிறுமி..





அழகாய்
கட்டியமண்வீடு..
கலைத்து சென்றன
அலைகள்..

மகிழ்ச்சியில்
திளைத்த சிறுமி..
கட்டத்துவங்கினாள்
மறுவீடு..

சிறிது சாயம்
போனால் என்ன...
நம் வீடு
நம் குழந்தைக்குதானே..

மறைத்து வைத்த
கிரிக்கெட் பந்துகளை
பசங்களிடம் இன்றே
கொடுத்திர வேண்டும்..

-

மன்மதன்


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தோற்றுவிட்டதை
ஒப்புக்கொள்ளத்தானே
வேண்டும்..

தோல்வியிடம்
சொன்னேன்..

நான்
தோற்றுவிட்டேன்.

தோல்வியிடம்
தோற்ற
நான்

வெற்றியை
வெல்லாதிருக்க
தடுக்க நினைக்கும்
அனைத்தையும்..
தோற்கடிக்க வேண்டும்...

நான்
தோற்று போகும்
காலத்தில்..

என் வெற்றியை
சொல்ல
விட்டு செல்வேன்..
சில குறிப்புகளோடு..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org