தீபங்களில் பேசிய...

-

நண்பர் முத்துகுமரன் எழுதிய தீபங்கள் பேசும் தொகுப்பில் நான் உளறியவை...

ஒவ்வொரு முறை
உன் கூந்தலில்
இருக்கும்
பூ உதிரும் போது
என் உயிர் உதிர்கிறதே ..
அது ஏனோ..???

என்று ஆரம்பித்து என் கவிதை துவக்கினேன்..

முதல் காதலில்
நாவை உலர
வைப்பதை விட..
நாவை உளற
வைப்பதே அதிகம்..

-

சொல்லாமல்
தவிக்கும்
காதல்..
ஒரு சுகம்..

சொல்லிய பின்
பரிதவிக்கும்
காதல்..
ஒரு சோகம்..

-

காதலில்
எங்கேயாவது
எதிலேயாவது
இருவரையும்
பொருத்தி பார்ப்பது
வழக்கம்தானே..

சின்ன குழந்தையின்
உதட்டில்
இருக்கும்
கள்ளமில்லா
சிரிப்பு போல

நம் காதலும்
மெள்ள மெள்ள
வளர வேண்டும் என்ற
கர்வம் எனக்கிருக்கு...

காதலின் இறுக்கத்தை
அதிகமாக்கும்
காரணியில்
கூடலை விட
ஊடலுக்குத்தான்
சக்தி அதிகம்...

ஒவ்வொரு முறையும்
சண்டை முடிந்து
காதல் வலுப்படதருவாயே
ஒரு முத்தம்
கண்டிப்பாய் வேண்டும்
காதலில் லஞ்சம் ....

-

தென்றலுக்கு
நன்றி...
அவள்
கூந்தல் தொட
கலைதது கொடுத்ததற்கு...


கூந்தலுக்கு
நன்றி..
என்னவள்
ஸ்பரிசத்தை உணர
வாய்ப்பளித்ததற்கு....


-

இதழோட
இதழ் சேர்த்து
புது மொழி உண்டாக்கும்
இலக்கிய திறமை
காதலுக்கு உண்டு..


எத்தனை மொழிகள்
உண்டானாலும்
அதை
ஊமையாக்கும்
சக்தி கொண்டது
அதே காதல்..


-


நித்தம் நித்தம்
உன்னை காண
பல மைல்கள்
நடந்து திரிந்து...

வியர்க்க விறுவிறுக்க
ஒரு மரத்தின் மறைவில்
நின்று கொண்டு
காத்திருக்கையில்...

தோழியர் படை சூழ
நடிகர்களை பற்றி
அரட்டை
அடித்தவண்ணம்
நீ
என்னை கடந்து
செல்கையில்..

என்னையும்
ஒரு நடிகனாக கற்பனை
பண்ணி.. உன்னிடம் சொன்ன
அடுத்த கணம்..

'நீ எனக்கு
மட்டும்தான்'
என்று சொல்லி
வைத்தாயே ஒரு குட்டு..

காதலில்
தேசிய விருது பெற்றேன்..
அப்பொழுது...



-

சின்ன சின்ன
பிரிவுகளுக்காக
எத்தனை முறை
வேண்டுமானாலும்
உன்னுடன் சண்டை போட
தயார்...

பிரிவு
நம்முடைய
உறவை
பலப்படுத்தும் என்பதால்..


-

என்
குளிர்கால
இரவுகளின்....
கதகதப்பான
உன் நினைவுகள்..


சுட்டெறிக்கும்
உன் பார்வையை
மீறி...
என் பார்வைகள்
எங்கோயெல்லாம்
சென்று
கடைசியில்
உன் உதட்டருகில்
வந்து நிற்கும்..

பேச வேண்டாம்
என்று
நீ இருந்தாய்...
பேசவே வேண்டாம்
என்று
நானிருந்தேன்..

கடைசியில்
நம்
உள்ளம்
பேசிக்கொண்டதை..
கண்கள் அறியும்....


-

என்
குறும்பு
பிடிக்கும் என
அடிக்கடி நீ
சொல்லக்கேட்டு..


ஒரு தினம்
என்னையறியாமல்

உன்
துப்பட்டாவை
நான்
இழுக்க...

நிலை தடுமாறி.
என் மீது
நீ
விழுந்த கணம்...

என் மனம்
தடுமாறி
போனதை
யார் அறிவார்....

என்
குறும்பையெல்லாம்
நிறுத்திய அந்த கணம்..
காதலை
வளர்த்த

காதல் தினம்...

-

என்னவள்
பிறந்த
நாள் பரிசாக
என்ன
கொடுக்கலாம்..
என்று
சிந்தித்து சிந்தித்து...


கடைசியில்
நான்
வாங்கி
கொடுத்தது
ஸ்டிக்கர் பொட்டு..


சரியான
கஞ்சூஸ் நீ
என்று கடிந்து
கொண்டாலும்..
அந்த
பொட்டை
நீ
உன் முகம்
பார்க்கும்
கண்ணாடியில்
ஒட்டி வைத்து

தினம் தினம்
அதற்கு முன்
உன்
நெற்றியை
தோதாக வைத்து
என்னை நினைத்து
பொட்டு வைத்து
கொண்டதை
சொல்லிவிட்டு
போனது
உன்
பிம்பம்...


-

நீ
என் மனதில்
குடியேறிய
பிறகு
எனக்கு
கிரகணம்தான்
பிடிச்சிருக்கு போல..


யாரைப்
பார்த்தாலும்
அவர்
முகம்
இருண்டு
போய் நீயெல்லவா
தெரிகிறாய்
பிரகாசமாய்...

-

மோதிரம்
இடுவது
நம்முடைய
பண்பாடு
இல்லையே என்றாய்...


நீ
அடிக்கடி
என் முன்
நாணத்தால்
உன்
கைகள் கொண்டு
முகத்தை மூட


என் மோதிரம்
உன் கன்னம்
தொட்டு
வைக்கும்
முத்தத்தை
நீ
எப்பொழுது அறிவாய்....

-

நாம்
பேசிக்கொண்டே
தொலை தூரத்து
போயிருக்க
வேண்டும்..


நம்மை
பின் தொடர்ந்த
மழை கூட
தொடர முடியாமல்
நின்று விட்டது பார்..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org